சும்மா இல்லப்பே… 210 ஆடு காணோம் : தடயமே இல்லாமல் பட்டியுடன் 210 ஆடுகள் மாயம்… வடிவேலு பட பாணியில் புகார்… விழிபிதுங்கிய காவல்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2022, 6:37 pm
திருச்சி : வடிவேலு பட பாணியில் ரூ 22 லட்சம் மதிப்புள்ள 210 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுதலையூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரெங்கராஜ் (வயது 48), பெருமாள்(வயது 45). இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 210 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
பின்பு அந்த ஆடுகள் அனைத்தையும் திறந்தவெளியில் தற்காலிக பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளனர். அதன் பிறகு இருவரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது வடிவேல் பட பணியில் 210 ஆடுகள் இருந்த தடயமே இல்லை.
ஆடுகள் மற்றும் அவை அடைக்க அமைக்கப்பட்டிருந்த பட்டி என அனைத்தையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதனால் ரெங்கராஜ் பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை என்கின்றனர்.
சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. திருட்டு குறித்து சிறுகனூர் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.