ஒரே நாளில் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…ஒரே இரவில் இலங்கையுடன் நடந்த பேச்சுவார்த்தை…உடனே விடுதலை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 10:48 am

ஒரே நாளில் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…ஒரே இரவில் நடந்த பேச்சுவார்த்தை…உடனே விடுதலை!!

மத்திய நிதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று பகல் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும் இரண்டு நாட்டுபடகுளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களும் மீனவ அமைப்புகளும் நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்ட தன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் இரவு 11:30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!