ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு : லீக்கான தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 4:57 pm

தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து அந்த தம்பதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், வரும் 9ம் தேதி முதுமலை செல்லும் பிரதமர் மோடி, தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் நடித்த தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார்.

இதன் காரணமாக, இந்த தம்பதிகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!