24X7 இயங்கும் பார்… ரோந்து வரும் காவல்துறையை மிரட்டும் பார் உரிமையாளர்.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2023, 11:26 am
24X7 இயங்கும் பார்… ரோந்து வரும் காவல்துறையை மிரட்டும் பார் உரிமையாளர்.. தொடரும் அவலம்!!
கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டணம் செல்லும் சாலையில் 1667 என் கொண்ட தமிழக மதுபான விற்பனை கடை உள்ளது. இந்த விற்பனை கடையில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதற்கு ஏதுவாக பார் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாருக்கு உரிமையாளர் ரகு என்பவர் ஆவார். இவரது மனைவி காவல்துறை ஆய்வாளராக பணியில் இருக்கிறார். அரசு விதிமுறை மீறி இந்த மதுபான கடையில் கட்டிங் 90 ரூபாய் என்ற அடிப்படையில் வேறுபாட்டில் ஊற்றி தரும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணிக்கு செல்லும் பொழுது அதிக நேரம் கடை திறந்து இருப்பதும் கள்ளச் சந்தையில் மது இருப்பதும் இந்த கடையில் வாடிக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து காவல்துறையினர் கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது குறித்து பார் உரிமையாளரிடம் கேட்டால், தனது மனைவி ஜெய தேவி காவல்துறை ஆய்வாளராக உள்ளார் , கடையில் வந்து காவல் துறையினர் பணம் கேட்பதாக புகார் தெரிவித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர் ரகு மற்றும் கூட்டாளிகள்.
இதற்கு பயந்து கொண்டு காவல்துறையினர் இந்த கடைக்கு ரோந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர். மதுவிலக்கு துறை அமைச்சர் மது பிரியர்களுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பேசி வருவது மது பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் மதுக்கூடம் நடத்துபவர்களுக்கும் மதுக்கடையில் வேலை செய்பவர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.