குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ₹25 லட்சம் சன்மானம்.. கோவையில் NIA ஒட்டிய போஸ்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 2:41 pm

தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஐந்து பேர் குறித்து இது வரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து
தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் முகமது அலி ஜின்னா,அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம்,5 பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவில் இருந்து ஜூட் விட காத்திருக்கும் கட்சிகள் : காங்கிரஸ் போட்ட குண்டு.. தவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் NIA சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 244

    0

    0