கண்முன்னே கருகி உயிரிழந்த 2,500 கோழிகள் : ரூ.10 லட்சம் மதிப்பு.. பண்ணையில் தீ விபத்து… குமுறும் விவசாயி!!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2023, 11:48 am
ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து 2500 கோழிக்குஞ்சுகள் எரிந்து சேதம் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர் கோழி பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் சுமார் 7 செட்டுக்கள் அமைத்து ஒவ்வொரு செட்டுக்களிலும் 2500 கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார்.இந்த கோழி குஞ்சுகள் வளர்வதற்கு குஞ்சுகள் விட்ட 15 தினங்களுக்கு மண் சட்டியில் அடுப்பு கறி வைத்து அனல் உண்டாக்கி குஞ்சுகள் மிதமான வெப்பத்தில் இருக்கும் படி செய்வது வழக்கம்.
இந்நிலையில் அதேபோல் இன்று செய்துள்ளனர் அந்த கரிக்கட்டையில் இருந்து வந்த தீ பிழம்புகள் கீழே இருந்த தென்னமஞ்சியில் பட்டு மளமளவென தீ பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் அந்த கோழி செட்டில் இருந்த 2500 குஞ்சுகளும் எரிந்து கருகிப்போயின அதன்பின் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதனால் அந்த கோழி செட்டு மற்றும் கோழிக்குஞ்சுகள் முற்றிலுமாக கருகி போயின. இதனால் கோழி செட் மற்றும் குஞ்சுகளால் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் ஆயின திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவியது