சாத்தான்குளத்தில் தனியார் தோட்டம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா : விசாரணையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2023, 11:36 am
தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைது
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி “ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0 மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் காந்திபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வேலவன்புதுக்குளம் கிராமத்தில் சசிகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு 82 மூடைகளில் இருந்த சுமார் 2500 கிலோ கஞ்சா பறிமுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா மற்றும் வேன், 2 கார். 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.