கொரோனா சிகிச்சையில் 26 ஆயிரம் பேர் : கோவையில் கொரோனா நிலவரம் என்ன? முழு விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 8:01 pm

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றின் எண்ணிக்கையை ஒட்டியே இன்றும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 763 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் உள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று இருவர் உயிரிழந்தனர்.

தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கோவையில் 26 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2548 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!