தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன், இருசக்கர வாகனம் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பூச்சி மருந்துகள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடிகளை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கீழ் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வடக்கு புரத்தில் நேற்று இரவு லோடு வேனில் இருந்து படகுக்கு சரக்குகளை ஏற்றி கொண்டிருந்த TN 69 BS 5427 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சுசுகி சூப்பர் கேரி லோடு வாகனத்தை கியூ பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்.
அப்போது, போலீசாரை கண்டதும் அங்கு பைபர் படகில் பீடி இலை மூட்டைகளுடன் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலுக்குள் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து லோடு வேனை சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் 270 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்ட கியூ போலீசார் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 69 BC 3348 என்ற பதிவு எண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரம் பிச்சையா என்பவரது மகன் ஆரோக்கிய ஜான்சன் (36) என்ற நபரை கைது செய்து மேலும் அவருக்கு சொந்தமான பைப்பர் படகில் கடலுக்குள் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.