போக்சோவில் 28 வயது பெண் மீது வழக்கு.. கள்ளக்காதலனை பிரித்து வைத்ததால் ஆத்திரத்தில் செய்த செயலால் விபரீதம்..!!
Author: Babu Lakshmanan20 April 2022, 12:29 pm
கோவையில் 28 வயது பெண் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் இரு குடும்பத்தார் பேச்சுவார்த்தைக்கு பின் உமா ரஞ்சனியையும், ரமேஷைம் பிரித்துள்ளனர்.
இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் உமா ரஞ்சினி ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகளை ஆபாசமாக அவதூராக முகநூலில் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ந்து போன ரமேஷின் குடும்பத்தினர், உமா ரஞ்சனி மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், உமா ரஞ்சினி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67bயின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.