போடிநாயக்கனூர் அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி மகளிர் காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (28) குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் இவர்வேலை பார்த்து வரும் காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி இருந்து அருகில் உள்ள சில்லமரத்துபட்டியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சிறுவனுக்கு முனீஸ்வரி இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த சிறுவன் அந்த காப்பகத்தில் இருந்து போடிநாயக்கனூர் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பள்ளி சிறுவன் மனரீதியாக பாதிப்புகளுடன் உடல் சோர்வாக காணப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் அவனது சோர்வு குறித்து காரணம் விசாரித்த பொழுது தான் முதலில் தங்கி இருந்த விடுதியில் முனீஸ்வரி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது கூறியதாக தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் தெரியப்படுத்தவே உடனடியாக அவர் சிறுவனை விசாரித்து போடி மகளிர் காவல் நிலையத்தில் முனீஸ்வரி மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
புகார் அளித்ததை தொடர்ந்து போடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் முனீஸ்வரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.