3 நாள் தொடர் விடுமுறை.. திற்பரப்பு அருவியில் குடும்பம் குடும்பமாக குவியும் சுற்றுலா பயணிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 2:33 pm
thirparappu
Quick Share

தொடர் விடுமுறை மற்றும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

தமிழக மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் திருபரப்பு அருவி பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகளலால் நிரம்பி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தும் அதேபோல் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடி வருகின்றனர்.

Views: - 134

0

0