திட்டமிடல் இல்லாததால் 3 பேர் பலி.. உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறை காவல் கட்டப்பட்டுள்ளதா? எடப்பாடி பழனிசாமி சந்தேகம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 4:25 pm
மதுரையில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். போதிய பாதுகாப்பின்மையால் திருவிழாக்களில் சோக நிகழ்வுகள் தொடர்கிறது.
“பாதுகாப்பை முறையாக திட்டமிடாததால் மதுரை திருவிழாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருவிழாவில் உலா வந்தவர்களால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்
தமிழகத்தில் உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறையினர் காவல் கட்டப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.