ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை : உடனே ஸ்பாட்டுக்கு வந்த அமைச்சர்.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 1:59 pm

ராணிப்பேட்டை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே உள்ள காரை புது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62). இவரது மனைவி குணசுந்தரி (வயது 52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அறிவு மற்றும் ரமேஷ் (வயது 30) உள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன் பெரிய மகன் அறிவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளைய மகன் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டு வந்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
ரமேஷுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது தினந்தோறும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு ரமேஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாய் தந்தையினர் விரக்தியில் நமக்கு இனி யார் உண்டு என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தை அறிந்த அமைச்சர் எம்.ஆர் காந்தி இறந்தவர்களின் குடும்பத்தினரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!