8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : கனமழையால் நடந்த பரிதாப நிகழ்வு!!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2023, 9:26 am
8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : மின்சாரம் பாய்ந்து பலியான சோகம்!!!
குமரி மாவட்டம் ஆற்றூர் சித்தன்விளையை சேர்ந்தவர் சாம். இவரது மனைவி சித்ரா இவருக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின்(17) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலையில் மழை பெய்து கொண்டிருக்கும்
நேரத்தில் இவர்களின் வீட்டின் அருகில் உள்ள தாமஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கூரை தகரின் கீழ் பொருத்தப்பட்டிருந்த மின்சார உயர் தகடு மோதி சேதமடைந்ததில் மின்விளக்கின் ஓயர் அறுந்து அஸ்வினை தாக்கியது இதை பார்த்த தாய் சித்ரா மகனை காப்பாற்ற முயன்று உள்ளார்.
அப்பொழுது அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதை பார்த்த எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த மகள் ஆதிராவும் இவர்களை காப்பாற்ற முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கியதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர .
பலியான மூன்று பேரும் மழை பெய்ததால் யாரும் கவனிக்காத நிலையில் அந்தப் பகுதியிலே கிடந்துள்ளனர். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள கவனித்த இவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.8 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது