விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜம்பாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தில் வாழை தோப்பு வைத்துள்ளார்.
இதில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதால் வாழை தோப்பை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார், இந்த வாழைதோப்பிற்கு வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக வன்னிப்போர் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் (வயது 40), வெங்கடேசன் (வயது 45), சுப்ரமணி (வயது 38) ஆகிய மூவரும் சென்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக சடகோபன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் காட்டு பன்றிக்காக வைத்த மின்சார வேலியில் சிக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மின்சார வேலியில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.