குடகனாற்றில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு : தர்காவில் தொழுகையை முடித்து விட்டு குளிக்க சென்ற போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 9:27 pm

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள மூன்று இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள் பள்ளப்பட்டியில் இருந்து அம்மா பட்டி கிராமத்தில் உள்ள கோரித் தோட்டம் என்ற இடத்தில் தர்காவில் தொழுகையை முடித்துவிட்டு அருகில் உள்ள பண்ணப்பட்டி குடகனாற்றில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆற்று மேம்பாலத்தின் அருகே தேங்கிய நீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.

மெளஃபியா (வயது 12) முதலில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மாட்டிக் கொண்டார். இவரை காப்பாற்றுவதற்காக சேக் பரித் (வயது 40) மற்றும் ரியாஜுதீன் (வயது 38) இருவரும் சென்று உள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 603

    0

    0