ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயன்ற திருடர்கள்: காலை இழந்த பயணி: கொடூர சம்பவம்…!!

Author: Sudha
18 August 2024, 11:19 am

ரயில்களில் ஜன்னலோரம் செல்போன்களை கையில் வைத்திருக்கும் பயணிகளிடமும் படிக்கட்டுகளில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் பயணிகளைடமும் செல்போனை பறிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயிலில், வடமாநிலத்தை சேர்ந்த கிரண்குமார் என்னும் இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார்.

கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது, கிரண்குமார் ரயில் படியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் கிரண்குமாரின் செல்போனை பறிக்க முயற்சித்தனர். இதில் கிரண்குமார் ரயிலில் இருந்து கீழே விழுந்த நிலையில், வலது கால் துண்டாகி, இடது கால் பாதம் வெட்டுப்பட்டது. சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார் கிரண்குமாரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த செல்போன் ஒன்றை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், செல்போன் சுந்தரேசன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பின்னர் யுவராஜ் மற்றும் ஹரி பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா போதையில் செல்போன் பறிக்க முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

மற்றொரு குற்றவாளியான சுந்தரேசன் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Leo Ban case quashed by MHC Bench லோகேஷுக்கு உளவியல் சோதனைச் செய்யக் கோரிய மனு தள்ளுபடி.. லியோ வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவு!