காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan10 November 2023, 4:20 pm
காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!!
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் ஆகிய மூன்று பேர் நேற்று இரவு மதுக்கரை செட்டிபாளையம் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி கட்டு, கட்டாக பணத்தை அடுக்கிக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மதுக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். சந்தேகப்படும்படி நின்ற அந்த நான்கு சக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் கட்டு, கட்டாக ரூபாய் 78 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் மூன்று பேரையும் கைது செய்து மதுக்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் திருச்சூர் மாவட்டத்தில் நகை பட்டறையில் வேலை செய்து வருவதாகவும், அங்கு இருந்து நகைகளை கொண்டு வந்து கோவையில் பல்வேறு நகை கடைகளில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறி உள்ளனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.