குழாயடி சண்டையில் பக்கத்து வீட்டு தம்பதியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் : 2 பெண்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 10:44 am

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சு. இவர்களது வீட்டின் முன்பு உள்ள தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி சம்பவத்தன்று மகேஸ்வரி மகேஸ்வரியின் தாய் மற்றும் இரணியலை சேர்ந்த மதி மகேஸ்வரியின் கணவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியதுடன் கம்பியால் ரமேஷை தாக்கியுள்ளனர்.

இதில் ரமேஷ் படுகாயமடைந்து அவர்களிடம் இருந்து தப்பியோடிய நிலையில்
தடுக்க வந்த அவரது மனைவி மஞ்சுவையும் அந்த கும்பல் கட்டிலில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கி தப்பி சென்றது.

இதில் படுகாயமடைந்த ரமேஷ்,அவரது மனைவி மஞ்சு ஆகியோர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று மாலை மகேஸ்வரி மற்றும் அவரது தாய் தமிழ்செல்வி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணை கட்டிலில் தள்ளி விட்டு தாய் மகள் என குடும்பத்தோடு தாக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!