பிடிக்க வந்த 3 போலீசாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போக்சோ குற்றவாளியால் நடந்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 5:48 pm

பிடிக்க வந்த 3 போலீசாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போக்சோ குற்றவாளியால் நடந்த கொடூரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ‘ஆனந்தநகர்’ பகுதியை சேர்ந்தவர் ‘ஜேசு என்ற அசோக்குமார்’.

இவர் போக்சோ வழக்கில் கைதாகி வெளிவந்தபின் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறக்கப்பட்ட நிலையில்,
சாயல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று காவலர்கள் இன்று அவரை கைது செய்ய சென்றபோது, அவர் அரிவாளால் வெட்டியதில் மூன்று போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதில் காளீஸ்வரன் என்ற குற்றப்பிரிவு காவலருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறியதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போக்சோ வழக்கு குற்றவாளி அரிவாளால் வெட்டியதில் 3 போலீசார் காயம் அடைந்த சம்பவம் சாயல்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!