தனியார் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்… பல்லடத்தில் பகீர் : போலீசார் விசாரணை,!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 8:25 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு 15 வயதில் தரணி தேவி மற்றும் 13 வயதில் மோகனப்பிரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு 15 வயதில் கௌசல்யா என்ற மகளும் உள்ளார்.

தரணிதேவி மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெறாதால் மறுதேர்வுக்காக படித்து வந்துள்ளனர்.

தரணி தேவியின் தங்கை மோகனப்பிரியா அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று காலை பெற்றோர்கள் வேலைக்கு சென்ற போது வீட்டில் சொல்லாமலேயே மூன்று பேரும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்தபோது மூன்று பேரும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தரணி தேவி தான் சென்னைக்கு செல்வதாகவும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் அளித்த புகாரி அடிப்படையில் மாணவிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!