திடீரென மாயமான ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள்… பெற்றோர்கள் புகார்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்….!!
Author: Babu Lakshmanan5 January 2024, 1:33 pm
கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள் வெளியே சென்று மாயமாகியதாக கூறப்படுகிறது.
மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது மூன்று பேரும் பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகளில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் மாணவிகள் கிடைக்காத காரணத்தால், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பேருந்து மூலம் மாணவிகள் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.