இரவாகியும் வீடு திரும்பாத பள்ளி மாணவர்கள்.. கிணற்றை எட்டிப் பார்த்த பெற்றோருக்கு ஷாக்…சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 2:27 pm

கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 12) 7ஆம் வகுப்பு, மாரிமுத்து (வயது 13) 6ஆம் வகுப்பு, விஷ்ணு (வயது 13) 8ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள் நேற்று மாலை அருகில் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இரவு வரை வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தேடி அழைந்துள்ளனர்.

மேலும் படிக்க: தரவுகளை பதிவேற்றுவதில் குளறுபடி… நிதியுதவி கிடைக்காமல் ரூ.2 லட்சம் தாய்மார்கள் அவதி ; தமிழக அரசு ராமதாஸ் அறிவுறுத்தல்

அப்போது, கிணற்றில் குளிக்க சென்ற மாணவர்களை காணவில்லை என்று தெரிந்து கொண்டு கிணற்றில் பார்த்துள்ளனர். கிணற்றில் மாணவர்களின் உடல் இருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வந்து தேடி பார்த்தபோது மூன்று மாணவர்களும் இறந்த நிலையில் பிரேதத்தை மீட்டு, கரூர் நகர காவல் துறையினர் உதவியுடன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்களான சிறுவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…