தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 9:11 pm

மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 31% -ல் இருந்து 34 % ஆக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் 3% உயர்வுடன் அகவிலைப்படி வழங்கப்படும் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 494

    0

    0