மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு.. தாய் யானை இறந்தது கூட தெரியாமல் உடலை சுற்றி சுற்றி வந்த குட்டிகள்…!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 10:38 am

தருமபுரி ; மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் மூன்று காட்டு யானைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஐந்து காட்டு யானைகளில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

குறிப்பாக, பாலக்கோடு, ஒகேனக்கல் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உணவாக உட்கொண்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள், வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடிப்பதும் மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை பிடிப்பதற்காக விவசாய தோட்டத்தில் மின்சார கூண்டு ஒன்று அமைத்து இருந்ததாகவும், காலை நேரத்தில் சுற்றித்திரிந்த ஐந்து யானைகளில் மூன்று யானைகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சார கூண்டை மிதிக்கும் பொழுது, மூன்று காட்டு யானைகளுக்கும் மின்சாரம் பயந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

ஊருக்குள் யானைகள் நுழைவதும் காட்டுக்குள் விரட்டி அடிப்பதுமாக உள்ள நிலையில், யானைகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனரா..? காடுகளில் வாழும் யானைகளுக்கு தேவையான உணவுகளை உட்படுத்தப்பட்டுள்ளனவா..? யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக மின்சார கூண்டு அமைக்கப்பட்டதாக தெரிவித்து பாறை கொட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இந்த மூன்று காட்டு யானைகளையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த மூன்று காட்டு யானைகளும் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!