காஞ்சிபுரம் நகரில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்த 3 பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை உள்ளாடைக்குள் மறைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சுயசேவையாக தேர்ந்தெடுத்து, அதற்கான பணத்தை கேஷ் கவுண்டரில் செலுத்தி பின்னர் பொருட்களை பெற்று செல்வர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று மாலை கடைக்கு வந்த மூன்று பெண்கள், பொருட்கள் வாங்குவதற்க்கான பிளாஸ்டிக் கூடையை எடுத்து கொண்டு, மளிகை பொருட்கள் பிரிவு, பூஜை பொருட்கள்,வீட்டு உபயோக பொருட்கள்,குழந்தைகளுக்கு தேவையானவை பிரிவு என அனைத்து பிரிவுகளுக்கும் சுற்றி சுற்றி வந்தனர்.
சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக தங்களுக்கு தேவையான பொருட்களையெல்லாம் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கேஷ் கவுண்டர் வரும்போது செற்ப அளவிலான பொருட்கள் மட்டுமே பில் போட்டனர். 3 பெண்மணிகளில் ஒரு பெண்மணி எவர்சில்வர் ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை பர்சேஸ் செய்து 80 ரூபாய் பணம் செலுத்தினார்.மற்றொரு பெண் கூல்டிரிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி 70 ரூபாய் செலுத்தினார்.
அந்த மூன்று பெண்களும் சேர்ந்து 150 ரூபாய் க்குதான் பொருட்களை வாங்கியுள்ளனர். அந்த மூன்று பெண்மணிகளும் கடையை விட்டு செல்லும்போது அவர்களின் நடையில் வித்தியாசம் காணப்பட்டதை சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் கவனித்து சந்தேகம் அடைந்துள்ளார்.
உடனே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அப்பெண்கள் பொருட்கள் தேர்ந்தெடுத்து, ஆளில்லாத நேரத்தில் தங்களின் உள்ளாடைக்குள் இரண்டு கால்களின் மத்தியில் ஓரு பையை மறைத்து வைத்து அதில் பொருட்களை போட்டு திருடி சென்றது தெரியவந்தது. சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் வெளியே வந்து தேடி பார்த்த போது அந்த மூன்று பெண்களும் காணவில்லை. அந்தப் பெண்கள் உள்ளாடைக்குள் பொருட்களை மறைத்து எடுத்து சென்ற வீடியோ காஞ்சிபுரம் நகரில் வைரலாக பரவி வருகிறது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
This website uses cookies.