3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை… குற்றவாளிக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்…!!
Author: Babu Lakshmanan30 March 2023, 1:28 pm
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரைச் சேர்ந்த முத்து (32) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு, மே 12ம் தேதி 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் முத்து மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகளும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.