வடிவேலு காமெடி போல 3 வயது சிறுமி செய்த சேட்டை : வைரலாகும் க்யூட் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 5:09 pm

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கும் வடிவேலு பாஞ்சாலங்குறிச்சி என்னும் திரைப்படத்தில் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன் ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்வார்.

ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும் இந்த நகைச்சுவை மிகவும் ரசிகத்தக்கதாக இருக்கும். இதேபோல ஆனைமலையைச் சேர்ந்த மூன்று வயதான வேத ஸ்ரீ என்கிற சிறுமி யோகா செய்வதற்காக வடிவேலுவை போல யோகா மேட்டை விரிக்க முயற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

https://vimeo.com/820485964?share=copy

நகைச்சுவை பாணியில் வடிவேலுவை வேத ஸ்ரீ நினைவு கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!