யாருய்யா நீ… 30 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மின்விசிறியில் காற்று வாங்கிய திருடன்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 1:04 pm

நாகை : வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டில் 30 சரவன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சொந்த ஊர் திரும்பிய அவர்கள் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கொள்ளை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது பின்புற கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு ஹாயாக சென்றுள்ளனர்.

திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1391

    0

    0