விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு வயது ஒரு வித்தியாசமாக தெரியவில்லை அந்த பெண்ணும் சிறுவன் மீது காதல் வயப்படவே இருவரும் தனிமையில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர் இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடையில் உடன் வேலை செய்தவர்களுக்கும் இருவரும் பழகிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரித்த போது சிறுவன் அந்த பெண்ணை அக்கா என்று கூறிய நிலையில் தீவிர விசாரணையில்
முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து பெற்றோர் சுதாரித்து கொண்டு இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தபோது இருவரும் ஒன்றாக சுற்றி திரிவதை கண்டுபிடித்தனர்
மேலும் இதையடுத்து அந்த பெண்ணை சிறுவனின் பெற்றோர் கண்டித்த நிலையில் இருவரும் தங்களது காதலை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து பழகி வந்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரது பெற்றோர் கிளாம்பாக்கத்திற்கு வந்து மகனை மீட்ட நிலையில் அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர் 15 வயது சிறுவனை திருமணம் ஆகாத 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள அழைத்து சென்றபோது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.