60 அண்டாக்களில் கொதித்த 3,000 கிலோ ஆட்டிறைச்சி.. மிலாடி நபிக்காக 50 ஆயிரம் பேருக்கு தயாரான பிரியாணி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 7:55 pm

60 அண்டாக்களின் கொதித்த 3,000 கிலோ ஆட்டிறைச்சி.. மிலாடி நபிக்காக ஏழைகளுக்கு பிரியாணி இலவச விநியோகம்!!

கோவையில் மீலாது நபி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஜமாத் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகமது நபி பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் மிலாது நபி விழாவாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.கோவையில் மிலாது நபி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கோவையில் உள்ள மதராசாக்களில் படிக்கும் இஸ்லாமிய சிறுவர்கள் தப்படித்து கொண்டு முகமது நபியின் பெருமையை விளக்கும் விதமாகவும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஊர்வலமாக பாடல்கள் பாடியபடி சென்றனர்.

இந்த ஆண்டும் கோவை உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புகடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. அதே வேளையில் மிலாதுநபி விழாவை கொண்டாடும் விதமாகவும் , ஏழை, எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜமாத் சார்பில் இலவசமாக பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று அதிகாலையிலேயே 50 அடுப்புகளில் சுமார் 1500″கிலோ பிரியாணி அரிசியை கொண்டு 8000″பேர் சாப்பிடும் வகையில் பிரியாணி தயாரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

இதே போல இன்று பல்வேறு இடங்களில் சுமார் 50″ஆயிரம் பேருக்கு பிரியாணி விநியோகம் செய்ய பிரியாணி சமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 448

    0

    0