3000 கிலோ கெட்டுப்போன பழனி கோவில் பஞ்சாமிர்தம்… வாகனத்தை சிறைபிடித்த இந்து அமைப்பினர்… பக்தர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 10:16 am

பழனி முருகன் கோவில் சார்பில் தயாரிக்கப்பட்ட காலாவதி தேதி முடிந்து, கெட்டுப்போன 66 கேன்களில் டன் கணக்கிலான பஞ்சாமிர்தங்களை ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் தயாரித்து பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம் பஞ்சாமிர்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதலாக 1 லட்சம் பஞ்சாமிர்தங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் இருந்த பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். அதனை தனியார் தொலைக்காட்சிகளில் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தாங்கள் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் காலாவதி தேதி குறிப்பிட்ட 15 நாட்களில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ஒரு கேன்களுக்கு 50 கிலோ விதம் 66 கேன்கள் மூலமாக லாரியில் காலாவதியான பஞ்சாமிர்தங்களை ஒட்டன்சத்திரம் அருகே கள்ளி மந்தையம் கோசலா வளாகத்தில் வைத்து அழிப்பதற்காக கொண்டு செல்லும்போது, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி காலாவதியான பஞ்சாமிர்தம் லாரியை அடிவாரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ