விளையாடிக் கொண்டிருந்த சிறுமி.. பதுங்கிய இளைஞருக்கு தேடிவந்து தர்ம அடி.. கரூரில் பரபரப்பு!
Author: Hariharasudhan11 February 2025, 11:42 am
கரூரில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி கொடுத்து உறவினர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் சிறுமிகளுடன் 7 வயது சிறுமி ஒருவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இவ்வாறு சிறுமி விளையாடிக் கொண்டிருந்த அந்த இடம், வழக்கமாக அனைவரும் விளையாடும் இடம் எனக் கூறபடுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மாரியப்பன், 7 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு கடத்திக் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த 7 வயது சிறுமிக்கு 31 வயதுடைய மாரியப்பன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அந்த சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த கார் ஓட்டுநரை பெற்றோர் தேடி உள்ளனர். ஆனால், இது குறித்து அறிந்த மாரியப்பன், தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
பின்னர், இந்தத் தகவலின் பேரில், நேரடியாக உறவினர் வீட்டிற்கு சென்று, மாரியப்பனைக் கண்டுபிடித்து, அங்கேயே சிறுமியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், அவரை போலீசில் ஒப்படைத்ததுள்ளனர். மேலும், இது தொடர்பாக சிறுமியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்கி கூட இருந்துட்டு தனுஷுக்கு எதிரா எப்டி?.. நைசாக சமாளித்த பிரதீப்!
பின்னர், இந்தப் புகாரின் பேரில், போலீசார் கார் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், கிராம மக்கள் கார் ஓட்டுநரை தாக்கியதால், மாரியப்பனுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.