வாலிபால் ஆடிய மாணவியின் வாழ்கையில் விளையாட்டு.. குமரியில் நடந்த கோரம்!

Author: Hariharasudhan
30 December 2024, 1:05 pm

குமரியில், வாலிபால் விளையாடி விட்டு திரும்பிய பள்ளி மாணவியை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க தந்தை இப்போது வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளிக்கு வெளியே அந்த மாணவி சாலை ஓரத்தில் நின்றதை பார்த்து அங்கு நின்ற 37 வயது மதிக்கத்தக்க ஒருவர், ‘ஏன் இங்கு நிற்கிறாய்’ எனக் கேட்டுள்ளார்.

Sexual assault to school girl in Kanyakumari

அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார். உடனே, அருகில் இருக்கும் வீட்டைக் காட்டி ‘இது எனது வீடு தான், நீ மேலே மாடியில் பாத்ரூம் சென்று வா’ எனக் கூறியுள்ளார். எனவே, அவர் மேலே பாத்ரூம் சென்றுவிட்டு கீழே இறங்கி வந்த போது, அவரை அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து, அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று பூட்டி வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!

இதனையடுத்து, சிறுமி அழுதபடி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 107

    0

    0

    Leave a Reply