வனப்பகுதிக்கு நடுவே கள்ளச்சாராய ஊற்று… 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார் ; வேலூரில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 12:42 pm
Quick Share

வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சுற்றியுள்ள மலைப்பகுதியில் சுமார் 82 மலை கிராமங்கள் உள்ளனர். இன்று ஒரே நாளில் திடீரென 100 போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அணைக்கட்டு தாலுக்காவில் உள்ள அல்லேரி, வாழைப்பந்தல், நெல்லிமரத்துக் கொள்ளை உள்ளிட்ட மலை பகுதிகளில் எந்த அளவிற்கு விவசாயம் நடக்கிறதோ, அதை விட பல மடங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று கொண்டுள்ளனர்.

இதனை கண்டுபிடிக்க அணைக்கட்டு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு இருந்த சாராய ஊரல்களை அழித்தனர். அப்போது, அல்லேரி, ஜார்தான் கொள்ளை காட்டுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3700 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவாறு நொறுக்கி தீமூட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும், காட்டுக்கு நடுவே யார் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊரல் பதுக்கி வைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 460

    0

    0