ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 4 பேர் மீண்டும் அடைப்பு : வேறு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் முகாமில் தங்கவைப்பு!
Author: Udayachandran RadhaKrishnan13 November 2022, 12:22 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு 11. 25 மணிக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டனர்.
இவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை முடியும் வரை இந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
தொடர்ந்து நால்வருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அறை ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவைகள் சிறப்பு முகாமிற்கு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி சிறப்பு முகாம் வளாகத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள னர். சிறை வளாகத்தின் வெளியில் நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி அவர்களை வரவேற்றனர்.
0
0