சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 4 பேர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 10:53 am

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே இன்று அதிகாலை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

அதில் வேனில் 14 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் நான்கு பேர் உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்க : வார இறுதி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் விலை!

வேனில் பயணித்தவர்கள் திருப்பதி மலைக்கு சென்று அதே பகுதியில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான குடிபண்டாவுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

4 Died in Tirupti Accident

காயம் அடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்து பற்றி குடிபண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • Saindhavi GV Prakash emotional moment மீண்டும் ஒரே மேடை..ஜிவி பிரகாஷை பாராட்டிய சைந்தவி…!
  • Views: - 43

    0

    0

    Leave a Reply