இது பைக்கா..? இல்ல ஆட்டோவா..? ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் 4 பேர் பயணம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 9:59 pm

ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் 2 மட்டுமே பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதிமுறைகள் இருப்பினும், அதனை காற்றில் பறக்கவிட்டு குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் 4 நபர்கள் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

ஆண்டகலூர்கேட் பகுதியில் இருந்து ராசிபுரத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதில் குழந்தையைப் போல் இளைஞர் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் முறையாக பணிகளில் ஈடுபட்டு இதுபோல பயணம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

https://player.vimeo.com/video/839780316?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 438

    0

    0