4 மாநிலங்களில் பாஜக ஆட்சி… தமிழகம், புதுச்சேரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்..!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 2:09 pm

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4ல் பாஜக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் சூழலில் இருக்கிறது. இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

BJP_FLAG_UpdateNews360

இதன் ஒருபகுதியாக, 4 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றியை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கொண்டாடப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டியது.

புதுச்சேரியில் பாஜக மாநில தலைமை அலுவலகம் முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சரவணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1558

    0

    0