மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2025, 11:51 am
பொங்கலை முன்னிட்டு மருதமலை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
இதையும் படியுங்க: நண்பனை வீட்டுக்குள் நம்பி விட்ட கணவனுக்கு ஷாக்.. மனைவியுடன் படுக்கையை பகிர்ந்த துரோகம்!
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 14.01.2025 முதல் 19.01.2025 வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்திற் கொண்டு 6 நாட்கள் மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப் படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.