கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் : 45 வயது 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை… நீதிமன்றம் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 10:16 pm

கோவை : 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்து வந்த மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக கடுங்காவல்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1284

    0

    0