அரக்கோணம் பச்சிளம் ஆண் குழந்தை பக்கெட் தண்ணிரில் முழுகடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உறவினர்கள் இருவரை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியில் பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தை கழிவறை பக்கெட் தண்ணிரில் தலைகீழாக முழுகடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மனோவின் அத்தை மற்றும் அத்தை மகள் உள்ளிட்ட இருவரை கைது செய்து நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியில் வசிப்பவர் மனோ (22). இவர் திருநின்றவூரில் பூக்கடையில் பூமாலை கட்டும் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அம்சா நந்தினி(19). இவர் தேவதானபட்டினத்தை சேர்ந்தவர். வேவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 5ம் தேதி நள்ளிரவு குழந்தைக்கு தாய் அம்சா நந்தினி பால் கொடுத்துவிட்டு, குழந்தை யுவன் மற்றும் மாமியாருடன் தரையில் ஒன்றாக படுத்து உறங்கியுள்ளனர். கணவர் அருகில் கட்டிலில் தூங்கியதாக கூறப்படுகிறது.
மீண்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். மீண்டும் 2 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததை கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர், மாமியாரை எழுப்பி விசாரித்துள்ளார். பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் நீரில் முழுகடித்து தலைகுப்புற இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தந்தை மனோ அளித்த புகாரின் பேரில் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தையின் தந்தை மனோவின் தந்தையின் சகோதரி தேன்மொழி (52), மற்றும் அவரது மகள் பாரதி (30) ஆகிய இருவரும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தேன்மொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை. மனோவின் தாய் கீதா கஷ்டப்பட்டு அந்த இடத்தில் சிறிய வீடுகட்டி மகனுடன் வசித்து வருகின்றார்.
தனது இளைய மகளை மனோ திருமணம் செய்யாமல் வேறு இனத்து பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசும் பிறந்ததால், மேலும் ஆத்திரமடைந்த தேன்மொழி குழந்தையை கொலை செய்ய மகளுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தையின் தாய் அம்சா நந்தினியை தீய சக்தி பிடித்துள்ளதாக கூறி, அடிக்கடி நாள் முழுவதும் வீட்டில் அடைத்து மந்தீரிகம் செய்வதாக கூறி வேப்பிலையால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
குழந்தையின் தந்தை மனோ தனது பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தது, சொத்து கிடைக்காத விரக்கதியால் திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு வீட்டின் வெளியே படுத்திருந்த தேன்மொழி பலமுறை உள்ளே சென்று முயற்சித்து, இறுதியாக அனைவரும் உறங்கிய பின் குழந்தையை தூக்கிச் சென்று பக்கெட் நீரில் தலைகீழாக போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போன்று படுத்து உறங்கியதாகவும், பின்னர் அனைவரும் தேடும்போது தானும், தனது மகளும் சேர்ந்து தேடியதாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பச்சிளம் குழந்தையை கொன்றது, அதற்கு மகள் உடந்தையாக இருந்ததாக கூறி தேன்மொழி, பாரதியை அரக்கோணம் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.