நெடுஞ்சாலை துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை… கைரேகை நிபுணர்களுடன் போலீசார் ஆய்வு!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 10:07 am

நெடுஞ்சாலை துறை ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை… கைரேகை நிபுணர்களுடன் போலீசார் ஆய்வு!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை செய்து வருகிறார்.

இவர் வேலை நிமிர்த்தமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். வீட்டில் குமாரின் சகோதரர் இருந்து வந்துள்ளார்.

அவர் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிலையில் (குமாரின் சகோதரர்) நேற்று மாலை வேலைக்காக சென்றுள்ளார். வேலை முடிந்து இன்று குமாரின் சகோதரர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து,போலீசார் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் பதிவாகியுள்ளார்களா என ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 852

    0

    0