திருச்சியில் இருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற 40 மாணவர்கள் : ஒரே ஒரு மாணவனுக்கு நேர்ந்த துயரம்… சடலமாக திரும்பிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 9:49 pm

திருச்சி : கல்லூரியிலிருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற மாணவர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, உறையூர் பாண்டமங்கலம் காவல்காரன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் மருதகணேஷ் (வயது 20). திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் B.Com மூன்றாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 15ம்தேதி மூன்று நாட்கள் 3ம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள்
40 நபர்கள் கல்விச் சுற்றுலாவாக கேரளா மாநிலம், கொச்சின் சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற மாணவ மாணவிகள் கடற்கரையில் நேற்று குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக அலையில் சிக்கி மருதகணேஷ் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருதகணேஷ் உடல் திருச்சிக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ