40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 6:47 pm

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள குண்டியல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 40). இவருடைய கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காலை வீட்டின் அருகே சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு அம்பிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.

இதையடுத்து அம்பிகாவின் போனில் உள்ள அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அதில் திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியை சேர்ந்த ஏழுமலை (24) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரும், 2 நண்பர்களும் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அம்பிகாவிற்கும், ஏழுமலைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்பிகாவை தீர்த்துகட்ட முடிவு செய்த ஏழுமலை கடந்த 4-ந் இரவு அவருக்கு போன் செய்தார். பின்னர் உல்லாசமாக இருக்க வீட்டிற்கு வெளியே வரும்படி அழைத்தார்.

அதை நம்பி வந்த அம்பிகாவுடன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் நாட்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (23) மற்றும் பந்தாரப்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கட்டாயப்படுத்தி உல்லாசமான இருந்தனர்.

பின்னர் அவரை சேலையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து எழுமலை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?