சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு… இளைஞருக்கு அறிவித்த தண்டனை!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2025, 4:40 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அசார் என்கின்ற ஜெகபர் சாதிக்.இவர் கடந்த 08.03.2020 ல் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெகபர் சாதிக்கை சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்க: ’அவரு என் மாமனார்..’ மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்.. தகாத உறவால் விபரீதம்!
இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞர் அசார் என்கின்ற ஜகபர் சாதிக் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 6 லட்சமும் தர வேண்டுமென திருவாரூர் மகிளா நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் முறையாக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன் கரட் மெதுவாக பாராட்டினார்.
மேலும் தொடர்ந்து சிறுமி மற்றும் பெண்களுக்கு எதிரான புகார்கள் வந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.