400 கிலோ கஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு… மெகா கஞ்சா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீஸார்.. பின்னணி குறித்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 5:52 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

kanja smuggling arrest - updatenews360

இந்த நிலையில், முள்ளிப்பாடி செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, சந்தேகத்தின்படி வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன் (29), சதீஷ்குமார்(26) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சரவணகுமார் (27) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

kanja smuggling arrest - updatenews360

இதில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட 3 நபர்கள் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 582

    0

    0