42வது நாளாக எண்ணூரில் நீடிக்கும் 33 மீனவ கிராம மக்களின் கடையடைப்பு போராட்டம்… தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரிக்கை!!
Author: Babu Lakshmanan6 February 2024, 10:47 am
சென்னை ; எண்ணூரில் செயல்பட்டு வரும் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் 42வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டலம் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலை 40 நாட்களுக்கு முன்பாக கேஸ் கசிந்ததால் சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாகுப்பம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 42 ஆவது நாளாக சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், தாளம் குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
42 நாட்ளாக நீடித்து வரும் இந்தப் போரட்டத்தில் பெண்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக தொழிற்சாலை இயங்கவில்லை. நிரந்தரமாக தொழிற்சாலையை மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று 33 மீனவ கிராம மக்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும், போராட்டம் தீவிரமாக தீவிர படுத்தப்படும் என மீனவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.