43வது முறை… தேதி குறித்த நீதிமன்றம் : செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 6:59 pm

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் ஜூலை 8ம் தேதிஉத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு மற்றும் வங்கி ஆவணங்களை கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க கோரிய, வழக்கின் விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல 43வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 245

    0

    0